தூய்மை பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தூய்மை பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தூய்மை பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள், ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு மாதம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் போலீசார் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மேலும் வளாகங்களில் மரக்கன்று நட்டு வைத்தனர்.

மேலும் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story