நெல் சேமிப்பு கிடங்கில் வழங்கல் அலுவலர் ஆய்வு


நெல் சேமிப்பு கிடங்கில் வழங்கல் அலுவலர்  ஆய்வு
x

நெல் சேமிப்பு கிடங்கில் வழங்கல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

மயிலாடுதுறை

செம்பனார்கோவில் அருேக கிடாரங்கொண்டானில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்குள்ள பொருட்களின் தரம், பொருட்களின் இருப்பு விவரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனுவாக அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவன், கிடங்கு உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story