கூடலூரில் 72 பள்ளியின் வாகனங்கள் ஆய்வு
கூடலூரில் 72 பள்ளியின் வாகனங்கள் ஆய்வு
கூடலூர்
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் மாதத்தில் துவங்க உள்ள நிலையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்காக இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கூடலூர் மோட்டார் வாகன அலுவலகத்திற்குட்பட்ட 72 பள்ளி வாகனங்களின் தகுதிகள் குறித்து நேற்று சென் தாமஸ் பள்ளி மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 வாகனங்களின் தகுதிச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. 12 வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. மீதம் உள்ள 57 வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டது. ஊட்டி வட்டார போக்கு வரத்து அலுவலர் தியாகராஜன், கூடலூர் ஆர்டிஓ முகமது குதுரதுல்லா, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடலூர் பகுதி ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் வரும் 30ம் தேதி மறு ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறை சார்பில் வாகனங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்துகளின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு, மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.