மின்மயான தகன மேடையில் எந்திரங்கள் அமைக்கும் பணி
செங்கோட்டை மின்மயான தகன மேடையில் எந்திரங்கள் அமைக்கும் பணி நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மின்மயான பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் மின் மயானத்தில் தகனமேடையில் எந்திரங்கள் அமைக்கும் பணிகளை தி.மு.க. நகர செயலாளா் வக்கீல் ஆ.வெங்கடேசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.ரஹீம் முன்னிலையில் தி.மு.க. நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவா் காளி, மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், பாஞ்ச் பீர்முகம்மது, சுப்பிரமணியன், வார்டு நிர்வாகிகள் சண்முகராஜா, பாலு, கோவிந்தன், சங்கர்கணேஷ், மாரி, ஜெகதீஷ், பீர்முகம்மது, அருண்குமார், நகர உதயநிதி நற்பணி மன்ற தலைவா் மணிகண்டன், செயலாளா் மனோஜ் லிங்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story