சேலைக்கு பதிலாக, பார்சலில் வந்த கிழிந்த துணிகள்
ஆன்லைன் செயலியில் முன்பதிவு செய்த சேலைக்கு பதிலாக, பார்சலில் கிழிந்த துணிகள் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
நீலகிரி
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் கடந்த 7-ந் தேதி ஆன்லைன் செயலியின் மூலம் ரூ.712 மதிப்புள்ள சேலை முன்பதிவு செய்தார். அவருக்கு 11-ந் தேதியன்று சேலை டெலிவரி செய்யப்பட்டது. பின்னர் உஷா பார்சலை வாங்கி, உள்ளே பிரித்து பார்த்த போது தரம் இல்லாத கிழிந்த சேலை அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேறு சேலை கேட்டு திருப்பி அனுப்பி விட்டார். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி வந்த பார்சலை உஷா ஆர்வத்தோடு வாங்கி பிரித்தார். அப்போது உள்ளே கிழிந்த துணிகள் இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் பார்சல் கொண்டு வந்த நபரை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர் ஆன்லைன் செயலி நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் என கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story