'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


அம்ருத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 July 2023 11:25 PM IST (Updated: 15 July 2023 1:17 AM IST)
t-max-icont-min-icon

'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவுறுத்தினார்.

வேலூர்

அணைக்கட்டு

'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவுறுத்தினார்.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் 'அம்ருத்' திட்டத்தின் கீழ் 7-வது வார்டு பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.47.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் கொராலா வேலூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சி.அம்சா (பொறுப்பு) ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

மழைக்காலம் தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் குளத்தை சுற்றி நடை பாதைகள் அமைத்து அதன்மேல்பேவர் பிளாக் கற்களை பதிக்கவுமட்அவர்கள் ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினர்.

இதனையடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மூலம் இயற்கை உரமங் தயாரிக்கப்படுவதை ஆய்வு செய்தனர். மேலும் பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள 5,144 வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு அம்ருத்திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அப்போது பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக நடைபெற்று வருவதாக செயல்அலுவலர் உமா ராணியை பேரூராட்சிகளின் இயக்குனர் பாராட்டினார்.

ஆய்வின் போது பள்ளிகொண்டா பேரூராட்சி செயல்அலுவலர் உமாராணி, பேரூராட்சி பொறியாளர் சந்தோஷ்குமார், பள்ளிகொண்டா பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வசிம்அக்ரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் தூய்மை பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

=========


Next Story