நெல் பயிருக்கு 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய அறிவுரை
நெல் பயிருக்கு 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய அறிவுரை
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் நெல் சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்து ரசீதை பெற வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----