Normal
காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு
தூத்துக்குடியில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு தொடங்கியது.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நெல்லை கோட்ட 29-வது மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான நேற்று பொது மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு நெல்லை காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் வரவேற்ார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ தொடக்க உரையாற்றினார். எஸ்.இசெட்.ஐ.யி.எப். இணைச் செயலாளர் சுரேஷ், துணைத்தலைவர் ராஜி, காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை தலைவர் மீனாட்சிசுந்தரம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் எஸ்.இசெட்.ஐ.யி.எப். துணைத் தலைவர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். முடிவில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நெல்லை கோட்ட பொதுச்செயலாளர் பொன்னையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story