ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்


ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்
x

நாங்குநேரி அருகே ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள சிங்கனேரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சிங்கனேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். நாங்குநேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகமது முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், துணை இயக்குனர் அசோக்குமார் (நுண்ணீர் பாசனம்), விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை துறை திட்டங்கள் குறித்தும், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர் பொன்வேல், துணை தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் ஆகியோர் அரசு திட்டங்களான தரிசு நல மேம்பாடு, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், மானிய விலையில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் பெறுவது குறித்தும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கிணறு மற்றும் மின் இணைப்பு இல்லாத விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்தல், மானிய விலையில் எந்திர கருவிகள் வழங்குதல், வாடகை பண்ணை எந்திரங்கள் குறித்தும் பேசினார்கள். முகாம் ஏற்பாடுகளை வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story