ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயலாக்க கூட்டம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயலாக்க கூட்டம் நடந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரம், வேளாண்மை துறையின் மூலம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எலந்தலைப்பட்டி கிராமத்தில் அனைத்து துறை திட்ட செயலாக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலத்தூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) பாண்டியன் கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அட்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒவ்வொரு விவசாயியின் செல்போனிலும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள இடுபொருட்களான தென்னங்கன்று வழங்குதல், தார்பாலின், மின்கல தெளிப்பான், பண்ணை கருவிகள் மற்றும் திரவ உயிர் உரம் வழங்குதல் போன்ற இடுபொருட்களை முன் பதிவு செய்வது எப்படி? என்று செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் கிராம விவசாயிகள் முன்னேற்ற குழு திட்டத்தை பற்றி விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி அலுவலர் மணிகண்டன் எடுத்துக்கூறி, முடிவில் நன்றி கூறினார்.கூட்டத்தில் அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.