கோவில்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த வேளாண்மை சிறப்பு முகாம்
கோவில்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த வேளாண்மை சிறப்பு முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இனாம் மணியாச்சி, இலுப்பையூரணி, மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்களில் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாமை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்துகிறது. முகாமில் குளத்தில் வண்டல் மண் எடுப்பது, விவசாயிகள் கடன் அட்டை வழங்குதல், பட்டா மாறுதல் சம்பந்தமான மனுக்கள் பெறுதல், பயிர் காப்பீடு குறித்த விளக்கங்கள் அளித்தல், கால்நடை நலன் பேண சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகளும், பொதுமக்களும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story