ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி விழிப்புணர்வு வாகனம்


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி விழிப்புணர்வு வாகனம்
x

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி விழிப்புணர்வு வாகனத்தை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி குறித்தும், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என வலியுறுத்தியும் நெமிலியில் விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் அண்ணா சாலை வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், வளர் இளம் பெண்களுக்கான ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இரும்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் குறித்து மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தன் சுத்தம் மற்றும் கை கழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ரத்த சோகை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ரேணுகாதேவி சரவணன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், தலைமை ஆசிரியர் சரளாதேவி மற்றும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story