விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி
சங்கராபுரம் அருகே விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார், உதவி வேளாண்மை அலுவலர் முகமது நாசர், உதவி தொழில் நுட்ப மேலாளர் மேரிஆனந்தி, ஒருங்கிணைந்த பண்ணை அலுவலர் ஆஷாபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், உழவன் செயலி செயல்பாடு, இயற்கை விவசாயம், அட்மா திட்ட பணிகள் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய கருத்து கண்காட்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story