ஒருங்கிணைந்த பண்ணையம் திறன் மேம்பாட்டு பயிற்சி


ஒருங்கிணைந்த பண்ணையம் திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் திறன் மேம்பாட்டு பயிற்சி

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

ஆக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்கோவில்பத்து கிராமத்தில் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், தேசிய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இதனை முன்னிட்டு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை சேர்ந்த 40 விவசாயிகளை கண்டுணர்வு சுற்றுலாவாக அழைத்து வந்து மேற்படி கிராமத்தில் விவசாயி அமைத்துள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தை பார்வையிட செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மீன், இறால், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் குறித்து ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக விளக்கி கூறப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய வேளாண்மை ஆராய்ச்சி மேலாண்மை நிலைய முதன்மை விஞ்ஞானி பாலகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால கண்ணன், உளவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தினர். இதில் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ரகு, பண்ணை மேலாளர் வேதரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story