சேலத்தில் ரூ.2½ கோடியில் அறிவுசார் மைய கட்டிடம்-ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு


சேலத்தில் ரூ.2½ கோடியில் அறிவுசார் மைய கட்டிடம்-ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jun 2023 2:34 AM IST (Updated: 28 Jun 2023 3:53 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு உள்ள அறிவு சார் மைய கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

சேலம்

அறிவு சார் மையம்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 7-வது வார்டுக்குட்பட்ட அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.2½ கோடியில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிட கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளன. இந்த நிலையில் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மையம் தரைதளம், முதல் தளம் என 2 தளங்களை கொண்டது. தரை தளத்தில் 60 பேர் உட்காரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம் மற்றும் நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை உள்ளன. அதே போன்று முதல் தளத்தில் 35 பேர் உட்காரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 பேர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

புத்தக அலமாரிகள்

இந்த மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 கண்காணிப்பு கேமரா, 75 அங்குலம் கொண்ட 2 டி.வி, ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வைக்கப்பட உள்ளன. இந்த மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story