முதல்-அமைச்சர் ஆய்வுப்பணியையொட்டி போலீஸ் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


முதல்-அமைச்சர் ஆய்வுப்பணியையொட்டி போலீஸ் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ஆய்வுப்பணியையொட்டி போலீஸ் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26, 27-ந் தேதிகளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டங்களில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர், 26-ந் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் வருகை தருகிறார். இதையொட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம் என தெரிகிறது. இதையொட்டி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையம், நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் ஆகியவற்றையும், அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்து போலீஸ் நிலைய சுவர்களில் வர்ணம் தீட்டும் பணியை தொழிலாளர்கள் மூலம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீஸ் நிலையங்களில் உள்ள முக்கிய ஆவணங்கள், அலுவலக பதிவேடுகளை தயார்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story