பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடைவிடுமுறை முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதையொட்டி குமரி மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கோடைவிடுமுறை முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதையொட்டி குமரி மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிகளை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதேபோல் குமாி மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பையொட்டி முன்னேற்பாடுகள் அனைத்தும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் 806 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் வருகை பதிவேடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜை மற்றும் நாற்காலிகள் அனைத்தும் போடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

தூய்மை பணி

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. குப்பைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் மேஜை மற்றும் நாற்காலிகளில் படிந்திருந்த தூசியை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பள்ளி, மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தூய்மை பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூய்மை பணிகளை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகிறாா்கள்.


Next Story