டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணி தீவிரம்


டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணி தீவிரம்
x

காகிதப்பட்டறையில் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்ச்சல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் நோய் தடுப்பு மற்றும் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணிகள், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காகிதப்பட்டறை தென்னமரத்தெருவில் அதிகம் பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.

அதனால் அந்த பகுதியில் மாநகர் நலஅலுவலர் கணேஷ் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீட்டின் தண்ணீர் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். குடிநீர் தொட்டிகள், பிளாஸ்டிக் டிரம்புகளில் சேமித்து வைத்திருந்த தண்ணீரில் அபேட் கரைசல் ஊற்றினர். வீட்டில் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்று பொதுமக்களிடம் சுகாதார பணியாளர்கள் அறிவுறுத்தினர்.


Next Story