நாகை நகராட்சி பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரும் பணி தீவிரம்
நாகை நகராட்சி பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளன
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாகை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாகை நகரின் மைய பகுதியான வ.உ.சி. தெரு, நீலா மேலவீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை நீர் சூழ்ந்தது. இதுகுறித்து 26-வது வார்டு கவுன்சிலர் முகம்மதுநத்தர் நகராட்சிக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த பகுதியை நகரசபை தலைவர் மாரிமுத்து, ஆணையர் ஸ்ரீதேவி, பொறியாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. மேலும் மழைநீர் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story