மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தூர் வாரும் பணி தீவிரம்
மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர்
குடியாத்தம் மோர்தானா அணையின் இடதுபுறக் கால்வாய் கே.வி.குப்பம் தாலுகா வழியாக செல்கிறது. கால்வாய் செல்லும் சில இடங்களில் மேடாகவும், சில இடங்களில் பள்ளமாகவும் உள்ளது. இதனால் கால்வாய் வழியே செல்லும் சின்ன நாகல் முதல் தேவரிஷி குப்பம் வரையிலான கால்வாய் பகுதியில் அணை நீர் சீராகச் செல்லாமல் சில இடங்களில் குட்டை போல் நீர் தேங்கும் சூழ்நிலை உள்ளது.
வருகிற மே மாதம் கோடை காலத்தை முன்னிட்டு விவசாய பாசனத்திற்காக அணை திறப்பது வழக்கம். அப்போது இந்த கால்வாயில் நீர் செல்ல தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கால்வாய் தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. அதன்படி கால்வாயில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனை நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story