குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை


குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை
x

குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

ஈரோடு

குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிகாரிகள் நியமனம்

ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் ரவுடியிசம், சாராயம், கஞ்சா ஆகியவற்றை ஒழிக்க பாடுபடுவேன் என்று கூறினார். இதேபோல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.

அதன்படி இரவு நேர ரோந்து பணியில் கவனம் செலுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு டவுன், பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய உட்கோட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அய்மான் ஜமால் (செல்போன் எண் 9498111786) தலைமையில் ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரவுநேர ரோந்து பணி

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீழ் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இரவு நேர ரோந்து பணியை தீவிரமாக கண்காணிப்பார்கள். மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது செல்போன் எண்களின் விவரம் வருமாறு:-

ஈரோடு டவுன் உட்கோட்டத்துக்கு மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா (94436 56999), பவானி உட்கோட்டத்துக்கு பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி (94981 02067), கோபி உட்கோட்டத்துக்கு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி (83000 37067), சத்தியமங்கலம் உட்கோட்டத்துக்கு பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் (9498149743), பெருந்துறை உட்கோட்டத்துக்கு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் (9498191545) ஆகியோர் இரவுநேர ரோந்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது செல்போன் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார்.


Next Story