2-ம் போக நெல் நடவு பணி தீவிரம்
உப்புக்கோட்டை அருகே, 2-ம் போக நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேனி
குச்சனூர் அருகே உள்ள கூழையனூரில் தொடங்கி, வீரபாண்டி மற்றும் பழனிசெட்டிபட்டி வரையிலான 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியாக கருதப்படுகிறது. முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் இங்கு இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு உள்ளிட்ட தானியங்களும் சாகுபடி செய்வது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், கடைமடை பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி முடிவடைந்து விட்டது. தற்போது வீரபாண்டி, உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய இடங்களில் 2-ம் போக நெல்நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 2 மாதத்துக்கு தண்ணீர் வரத்து இருந்தால் நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story