முதல்போக நெல் நடவு பணி தீவிரம்


முதல்போக நெல் நடவு பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Sept 2023 6:45 AM IST (Updated: 1 Sept 2023 6:45 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை பகுதியில் முதல்போக நெல் நடவு பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதி குச்சனூர் அருகே உள்ள கூழையனூரில் தொடங்கி வீரபாண்டி மற்றும் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் அமைந்துள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் இருபோக நெல் சாகுபடி செய்யடுகிறது. மேலும் இடைப்பட்ட காலங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு போன்ற தானிய வகைகளும் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதிக்கு முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் முதல்போக நெல்சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் முதல்போக நெல் நடவு பணி தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து இன்னும் 2 மாதத்திற்கு இருந்தால் முதல் போகத்தை நல்ல முறையில் அறுவடை செய்துவிடுவோம். இதற்கு வருண பகவான் தான் கருனை காட்ட வேண்டும் என்றனர்.


Next Story