ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை உறுதிபடுத்தும் பணி தீவிரம்
திருவண்ணாமலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை உறுதிபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு முக்கிய துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து வேங்கிக்கால் போளூர் சாலையில் உள்ள மாவட்ட ஆவின் அலுவலகம் வரை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.2 கோடி மதிப்பில் சாலை உறுதிப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவிகோட்ட பொறியாளர் ரகுராமன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி பொறியாளர் கலைமணி தலைமையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் நீதிமன்றத்தில் இருந்து ஆவின் அலுவலகம் வரை சாலையில் இருபுறத்திலும் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story