தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்


தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்
x

தடியன்குடிசை-குப்பம்மாள்பட்டி இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

பெரும்பாறை அருகே தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி வரை 8 கிலோ மீட்டர் தூரத்திலான தார்சாலை சேதமடைந்து இருந்தன. இதனால் மலைக்கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். இதைக்கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது தார்சாலையை சீரமைக்கும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த பணியை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story