மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் பொருத்தும் பணி தீவிரம்

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் பொருத்தும் பணி தீவிரம்
x

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் பொருத்தும் பணி தீவிரம்

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு மூலம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சைக்கிள்கள் தனித்தனி பாகங்களாக வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொண்டு வரப்பட்டன.

அதனை வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு பொருத்தப்படும் சைக்கிள்கள் சுற்றியுள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பின்னர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

Next Story