பழனி முருகன் கோவிலில் வர்ணம் பூசும் பணி தீவிரம்


பழனி முருகன் கோவிலில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:30 AM IST (Updated: 29 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடக்கிறது.

திண்டுக்கல்


முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி 2018-ம் ஆண்டு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதையடுத்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்தது.

இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. குறிப்பாக கோவில் ராஜகோபுரம், சிறிய கோபுரங்கள், வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக அங்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. எனவே பணிகள் நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.


Next Story