குலசேகரன்பட்டினத்தில் தசரா வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு பணி தீவிரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க பயன்படுத்தும் இடங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க பயன்படுத்தும் இடங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தசரா திருவிழா
மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது.
வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் திருவிழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் அக்டோபர் 5-ந்்தேதி நள்ளிரவு நடக்கிறது.
சீரமைப்பு பணி
திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
எனவே ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தாமல் அதற்கென இடங்களை தேர்வு செய்து அதில் நிறுத்தி வைக்கும் வகையில் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தருவைக்குளம் பகுதி, மணப்பாடு சாலை மற்றும் வீதியாக கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலையின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு சீரமைத்து வருகின்றனர். இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.