ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
x

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

பந்தல் அமைக்கும் பணி

இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும்நிகழ்ச்சி கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் வசதிகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story