வயல்களில் மண் அணைக்கும் பணி தீவிரம்


வயல்களில் மண் அணைக்கும் பணி தீவிரம்
x

மாா்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்காக சேதுபாவாசத்திரம் பகுதி வயல்களில் மண் அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:


மாா்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்காக சேதுபாவாசத்திரம் பகுதி வயல்களில் மண் அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நிலக்கடலை சாகுடி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் மார்கழி பட்டம் நிலக்கடலை பயிரில் ஜிப்சம் இட்டு களைகொத்தி மண் அணைக்கும் பணியில் நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு முறைவைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நாள் முதல் சுமார் 40 சதவீத விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்து நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பு பருவத்தில் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தற்போது 40 முதல் 45 நாள் பயிராக உள்ளது.

மண் அணைக்கும் பணி

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கரைசல் மற்றும் பயிர் ஊக்கி மருந்தை விதை விதைத்த 25- வது நாள் மற்றும் 40 வது நாள் என 2 முறை தெளித்தபின் 45- வது நாள் பூக்கும் தருணத்தில் களைக்கொத்தி மண் அணைக்கும் முன் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைத்தால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி தற்போது பூக்கும் தருவாயில் உள்ள மார்கழி பட்ட நிலக்கடலை பயிரில் ஜிப்சம் இட்டு களை கொத்தி மண் அணைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story