தைப்பூச தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்


தைப்பூச தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 July 2023 1:15 AM IST (Updated: 22 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி கோவிலில் தைப்பூச தேர் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபடுவார்கள். இந்நிலையில் தேரில் சில பாகங்களில் பழுது ஏற்பட்டது. அதனை சீரமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொட்டகை அமைத்து தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேரின் சக்கரத்தை தவிர மற்ற அனைத்து பாகங்களும் புதுப்பிக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தேரை சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. தேரின் மையப் பகுதியான சுவாமி பீடம் போன்றவை இலுப்பை மரத்தினால் புதிதாக செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தேரை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்துக்குள் இப்பணிகள் நிறைவடையும் என கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story