உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
உடன்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு 500 மீட்டர் உயரத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உடன்குடி:
உடன்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு 500 மீட்டர் உயரத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அனல்மின் நிலையம்
உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல் யூனிட்டில் மின்சாரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்குவதற்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வருவதற்கு கல்லாமொழிஅருகே கடற்கரையில் துறைமுகம் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடக்கிறது.
இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் மற்றும் 3-வது யூனிட்டிற்கு விரிவாக்கம் செய்வதற்காக காலன்குடியிருப்பு கிராமம் மற்றும் மாநாடு தண்டுபத்து கிராமம் ஆகிய பகுதிகளில் விவசாயம் நடைபெறாத காலி இடங்களை் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி, நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் இந்த இரு கிராமங்களிலும் உள்ள காலிநிலங்களை பத்திரப்பதிவுசெய்ய முடியாமல் உடன்குடி சர்பதிவாளர் அலுவலகத்தில் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
உயர்மின்கோபுரம்
உடன்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிஇடங்களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மாநாடு தண்டுபத்து பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிர படுத்தபட்டுள்ளது. 3 சென்ட் காலி இடத்தில், அதை சுற்றி கம்பி வேலி அமைத்து மின் கோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்காக 18 டன் இரும்பு பயன்படுத்தி சுமார் 500 அடி உயரத்தில் இந்த கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் மின்சாரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது யூனிட்டுகளில் மிந்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றார்.