மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்
நீடாமங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறுவை சாகுபடி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் இந்த ஆண்டு 34,802 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. முன் கூட்டியே சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மழைக்காலம் தொடங்கும் முன்பு அறுவடை பணியை முடித்தனர்.
சில விவசாயிகள் தாமதமாக குறுவை சாகுபடி பணியை தொடங்கினர். அப்போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டன.. இதனை எந்திரம் மூலம் அறுவடை செய்ததால் ஈரபதம் அதிகம் காணப்பட்டது.
நெல் காய வைக்கும் பணி
இதை தொடர்ந்து ஈரபத நெல் மணிகளை வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீடாமங்கலம் அருகே சித்தமல்லி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகம், பரப்பனாமேடு, காளாச்சேரி, கொண்டியாறு அருகில், பூவனூர், பெரம்பூர், ரிஷியூர், வெள்ளக்குடி பாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் மணிகளை வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் மற்றும் ெதாழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.