பள்ளிகளுக்கு இடையேயான கலை போட்டிகள்


பள்ளிகளுக்கு இடையேயான கலை போட்டிகள்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாகைக்குளத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை போட்டிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டி தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் ஏஞ்சலின் விஜயநிர்மலா கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், குழு பாடல், ரங்கோலி, ஓவியம் வரைதல், மண்பாண்டத்தில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு கலை போட்டிகள் நடந்தன. இதில் முதல் பிரிவில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், 2-வது பிரிவில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஸ்காட் கல்வி குழும இயக்குனர் ஜான் கென்னடி தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளிங்டன், நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story