பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கைப்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம், தூத்துக்குடி ஜிம்கானா கிளப் இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் நடந்தன. போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மாணவர்கள் பிரிவில் 42 அணிகளும், மாணவிகள் பிரிவில் 29 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், மாப்பிள்ளையூரணி சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கோவில்பட்டி ரவில்லா கே.ஆர்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும் பிடித்தனர்.
மாணவர்களுக்கான 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தூத்துக்குடி செயின்ட்தாமஸ் பள்ளி அணி 2-வது இடத்தையும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு விழா
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக உறுப்பினர் மங்களா ஜெயபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி ஜிம்கானா கிளப் பொருளாளர் நார்டன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், வெற்றிக் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் செயின்ட் ரவிராஜன், தூத்துக்குடி ஜிம்கானா கிளப் தலைவர் பாலமுருகன், செயலாளர் பின்டோ வில்லவராயர், பொருளாளர் நார்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.