பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி


பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி
x

பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி

மதுரை


மதுரை காமராஜர் பல்லைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 8 கல்லூரிகளில் இருந்து 35 மாணவர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் பிரிவில் 9 கல்லூரிகளில் இருந்து 22 மாணவிகள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் 56 புள்ளிகளுடன் முதலிடத்தை மதுரை லேடி டோக் கல்லூரியும், 42 புள்ளி களுடன் 2-வது இடத்தை மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் கலைக்கல்லூரி பெற்றது. ஆண்கள் பிரிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி 168 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், விருதுநகர் இந்து நாடார் கலைக்கல்லூரி 40 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், விளையாட்டு மேம்பாட்டுஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜானி சுசீலா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, மதுரை மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், செய லாளர் கண்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.


Next Story