கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் 'இண்டர்காம்' தொலைபேசி வசதி -சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்


கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் தொலைபேசி வசதி -சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்
x

மேலை நாடுகளில் போன்று கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் தொலைபேசி வசதியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.

மதுரை


மேலை நாடுகளில் போன்று கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் தொலைபேசி வசதியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.

இண்டர்காம் தொலைபேசி வசதி

மதுரை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதியாக சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில் இருக்கும் கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது கைதிகள் ஒரு புறமும், அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் மற்றொரு புறமும் நின்று பேசும் நிலை இருக்கும். அதில் அவர்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இருதரப்பினரும் அதிக சத்தத்துடன், கூட்ட நெரிசலில் சிக்கி பேசும் நிலை உள்ளது. எனவே கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து போனில் ேபச முடியும். மறுமுனையில் இன்னொரு போன் மூலம் கைதியிடம் உறவினர் பேசுவார். இதுபோன்ற இண்டர்காம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் சத்தமாக பேச வேண்டிய தேவை இருக்காது.

மேலை நாடுகளில் இருப்பது போன்று இண்டர்காம் வசதியுடன் ஒருவருக்கொருவர் பேசும் அறையானது முற்றிலும் நவீனமாயக்கப்பட்டு நேற்று காலை திறக்கப்பட்டது. இதில் சிறை கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கலந்து கொண்டு நவீன நேர்காணல் அறையை திறந்து வைத்து, இண்டர்காம் தொலைபேசி வசதியை தொடங்கி வைத்தார்.

தென் தமிழகத்தில் முதல் முறையாக...

இதுகுறித்து டி.ஐ.ஜி. கூறும் போது, மேலை நாடுகளில் உள்ளது போன்று இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதி தென்மாவட்டங்களில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 70 ஆயிரம் ரூபாய் செலவில் 15-க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைபேசிகள், கண்ணாடி தடுப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த நேர்காணல் பகுதி முற்றிலும் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை புழல், கோவை மத்திய சிறைகளை தொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இண்டர்காம் வசதியின் செயல்பாடுகள் குறித்து சிறை போலீசாருக்கும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story