தமிழக அரசுவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்பா.ம.க. வக்கீல் பாலு பேட்டி


தமிழக அரசுவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்பா.ம.க. வக்கீல் பாலு பேட்டி
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. வக்கீல் பாலு தொிவித்தாா்.

கடலூர்


பா.ம.க. சமூக நீதிப்பேரவை மாநில தலைவர் வக்கீல் பாலு கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான, விதிமுறைகளான 3 ஆண்டுகளில் வன்னியர்கள் தமிழ்நாட்டில் எந்த அளவில் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற தரவுகளை திரட்ட வேண்டும் என்று ஜனவரி மாதம் 12-ந்தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டு, அந்த அறிக்கையை 3 மாதத்தில் அரசுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்ததது. ஆனால் 3 மாதம் நிறைவடைந்த நிலையில், சிறு துரும்பை கூட பிற்படுத்தப்பட்ட ஆணையம் செய்யவில்லை. தமிழக அரசு அதை நிறைவேற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இந்த கல்வி ஆண்டிற்குள், குறிப்பாக மே 31-ந்தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை சட்டசபையில் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நிலை என்ன என்பது பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ம.க. மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், சமூக நீதி பேரவை மாநில பொருளாளர் தமிழரசன், மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story