சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி
சர் ஜசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி ;மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பங்கேற்பு
நாகப்பட்டினம் பாப்பாக்கோவிலில் இயங்கிவரும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாகை மாவட்ட போலீஸ் துறையும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தொடங்கி வைத்தார். தலைவர் த.ஆனந்த் வரவேற்று பேசினார். அப்போது அவர், போதை பொருட்களால் ஏற்படும் சமூக மாற்றம் குறித்தும், மாணவர்கள் சுயக்கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும், எதிர்கால இந்தியா இளைஞர்கள் நலனில்தான் உள்ளது என்றும் கூறினார். நிகழ்ச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் எழில் ரத்தினகுமாரி கலந்துகொண்டு போதைப்பொருள் பற்றியும், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனபாதிப்புகள் பற்றியும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்தும் அதற்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் எவ்வாறு துணைபுரிகிறது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும், போதைப்பொருளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.