சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சி


சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவிலில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி 80 வயது முதல் 100 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களை கவுரவித்து தேர்தல் ஆணைய சான்று வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, தாசில்தார் பாபு, தேர்தல் துணை தாசில்தார் ரவிகணேஷ், தேர்தல் உதவி அலுவலர் சுந்தர், களப்பாகுளம் கிராம உதவியாளர் தமீம் அன்சாரி ஆகியோர் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவித்தனர்.

என்.ஜி.ஓ. காலனி இந்திரா தெருவை சேர்ந்த 85 வயதான பிச்சம்மாள் ஆவுடையப்பன், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த 81 வயதான கோமதி கல்யாணசுந்தரம், சேக்கிழார் தெருவை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் 83 வயதான பாண்டியன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மூத்த குடிமக்களை அதிகாரிகளுக்கு வார்டு கவுன்சிலர் ஜலாலுதீன் அறிமுகம் செய்தார்.


Next Story