சர்வதேச ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பிப்.1-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை


சர்வதேச ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பிப்.1-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
x

மாமல்லபுரத்தில் பிப்.1-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சென்னை,

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி, பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


Next Story