சர்வதேச பின்னலாடை கண்காட்சி


சர்வதேச பின்னலாடை கண்காட்சி
x

சர்வதேச பின்னலாடை கண்காட்சி

திருப்பூர்

திருப்பூர்

செயற்கை நூழிலை ஆடை உற்பத்தியை அதிகரிக்க திருப்பூரில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) நடக்கிறது.

கண்காட்சி

இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர் சார்பில் சர்வதேச ஜவுளி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆயத்த ஆடை, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், வர்த்தக முகவர்களை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்துடன் (ஏ.இ.பி.சி.) இணைத்து இதுவரை 48 சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

49-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை திருப்பூரில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை இழை ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையை உலக அளவில் ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. வர்த்தக முகவர்கள், வர்த்தகர்களை கண்காட்சியை பார்வையிட அழைத்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து முன்னணி வர்த்தகர்கள், பிரதிநிதிகள் கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சங்கங்கள் பங்கேற்பு

இந்த கண்காட்சியில் ஏ.இ.பி.சி., திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஆயத்த ஆடை கைத்தறி ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர், ஜவுளிஉற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியோரும் பங்கேற்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செயற்கை நூலிழையில் நீச்சல் ஆடை, விளையாட்டு உடைகள் அடங்கிய சிறப்பு ஆடை அலங்கார கண்காட்சியை சிறந்த மாடல்களுடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய நிட்பேர் அசோசியேசன் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

----------


Next Story