தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்


தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழக   நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் டி.கே.அசோக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர் எஸ்.சுரேஷ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் கடல்வளம், நிலத்தடிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி எல்லை அருகே உள்ள சுங்கச்சாவடியை மாற்ற வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் காளிராஜ் பாண்டியன், இணை பொதுச் செயலாளர் சிவா, தலைமை கழக செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story