சர்வதேச கருத்தரங்கம்


சர்வதேச கருத்தரங்கம்
x

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புள்ளியியல் துறையில்" நிகழ்தகவு சமன்பாடுகள் அமைத்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகளில் தற்கால போக்கு'' என்ற தலைப்பில் புள்ளியியல் சர்வதேச கருத்தரங்கம் 2 நாட்கள் நடந்தது. இந்த கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்து பேசினார்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து புள்ளியியல் வல்லுனர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளியியல் வல்லுனர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினார்கள். கருத்தரங்கு ஏற்பாடுகளை பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் செந்தாமரைக்கண்ணன், லோகநாதன், ராஜரத்தினம், ஆறுமுகம் சசிகுமார், தினேஷ்குமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.


Next Story