அப்துல்ஹக்கீம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு
மேல்விஷாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் சமூக அறிவியல் ஆய்வுகளின் சமூக பொருளாதார மற்றும் கலாசார பரிமாணங்கள் எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.சாஜித் தலைமை தாங்கினார். தாளாளர் அப்ரார் அஹமது முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் பி.குமரன் வரவேற்றார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் டி.ஆறுமுகம் கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆய்வு கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட்டார். அதனை திருவள்ளுவர் பல்கலைகழக முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர ்எச்.முனவர்ஜான் பெற்றுக்கொண்டார்.
வங்கதேச நாட்டின் பேராசிரியை ராவன்க் ஆரா பர்வீன் கலந்துகொண்டு பேசினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சம்ர்பித்தனர். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊட்டி குன்னூர் பெண்கள் கல்லூரி பேராசிரியை ஷானி ருஸ்கின் நன்றி கூறினார்.