Normal
சர்வதேச சிலம்பம் போட்டியில் தேனி வீரர்கள் சாதனை
சர்வதேச சிலம்பம் போட்டியில் தேனி வீரர்கள் சாதனை படைத்தனர்.
தேனி
நேபாளம் நாட்டில் பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் கடந்த 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் தேனியை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் பாண்டியிடம் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கனைகள் 11 பேர் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர். இதில் 11 பேரும் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். மேலும் இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் இந்த குழுவினர் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த வீரர், வீராங்கனைகள் வருகிற செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் 48 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Related Tags :
Next Story