அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா
வந்தவாசியில் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் சென்னை ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் இணைந்து சர்வதேச விண்வெளிவார விழா அக்டோபர் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடைப்பெற்றது. மேலும் கல்லூரியில் மாநில அளவிளான கருத்தரங்கம் நடந்தது.
இதில் சென்னை ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுரேந்தர் பங்கேற்று விண்வெளி ஆராய்ச்சியில் மகளிரின் பங்கு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் பா.முனிரத்தினம், கல்லூரி செயலர் மு.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறைத்தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் சி.ருக்மணி தலைமை தாங்கினார். முடிவில் இயற்பியல் துறை போராசிரியர் அர்ச்சனா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.