ரோேபாட்டிக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கம்


ரோேபாட்டிக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கம்
x

ரோேபாட்டிக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில் "எந்திர மனிதன் 2050-க்குள் நம் சக பணியாளராக இருக்குமா?" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. இதில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவிகள் மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவிகள் பங்கேற்றனர். கருத்தரங்கத்திற்கு கல்லூரி செயலர் முனைவர் கோ. மீனா தலைமை தாங்கினார். கல்லூரி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஸ்பெயினைச் சேர்ந்த மேக்கோ ரோபோட் டிக்ஸ் நிறுவன தொழில்நுட்ப தலைவர் கிஷாந்த் ரெங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம், வேலை மற்றும் வீட்டின் ஒரு பகுதியாக ஓவ்வொருவரிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. ரோபோட் டிக்ஸ் வாழ்க்கை மற்றும் வேலை நடைமுறைகளை நேர்மறையாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றார். முதல்வர் (பொறுப்பு) ஜெ.ராதிகா, துணை முதல்வர்கள் எம்.ரெமா, வி.பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துறை தலைவர் என்.விஜெயலட்சுமி வரவேற்று பேசினார். முடிவில் துறையின் உதவி பேராசிரியை ஜெ.ரத்னா நன்றி கூறினார்.


Next Story