சர்வதேச உழைக்கும் பெண்கள் தின ஊர்வலம்


சர்வதேச உழைக்கும் பெண்கள் தின ஊர்வலம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் சர்வதேச உழைக்கும் பெண்கள் தின ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூரில் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டு சி.ஐ.டி.யூ. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களின் சார்பில் ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. திருவாரூர் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி, உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வினர் மாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவாரூர் ெரயில் நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு கருத்தரங்கம் நடந்தது. இதில் பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்களின் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கருத்தரங்கில் சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைத் தலைவர் .மகாலட்சுமி, மாதர் சங்க மாநில பொருளாளர் வி.பிரமிளா, சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் எஸ்.தேவமணி ஆகியோர் பேசினர். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் அனிபா, செயலாளர் முருகையன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story