திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய மாணவர் படையின் தரைப்படை அதிகாரி சிவமுருகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் கணேசன், நெல்சன் துரை ஆகியோர் கலந்துகொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கே.ஏ.மேல்நிலைப்பள்ளி, எல்.கே.மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 185 தரைப்படை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி லெப்டினன் கர்னல் சுனில் உத்தம் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் என்.சி.சி. யூனிட்டில் இருந்து சுபேதார் பிரகாஷ், ஹவில்தார் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரிகள் மணி, அரிச்சந்திரன், சேக் பீர்முகம்மது காமீல், சத்யன் மற்றும் ஐசக் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story